×

கடலோர காவல்படை தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்போரூர், ஜன.23: கடலோர பாதுகாப்பு குழுமம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் மற்றும் மாலுமி ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகளில் பங்கேற்க 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிழக்கு கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்களின் வாரிசுகள் இந்த பணிகளில் சேரும் வகையில் அவர்களுக்கு தேவையான சிறப்பு பயிற்சிகளை அளிக்க கடலோர பாதுகாப்பு குழுமம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, மீனவர்களின் வாரிசுகள் வரும் பிப்ரவரி 8ம்தேதிக்குள் இதற்காக விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பிக்கும் மீனவர்களின் வாரிசுகளுக்கு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பில், தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது, எவ்வாறு கேள்விகள் கேட்கப்படும், அவற்றுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் மற்றும் துறை ரீதியான சந்தேகங்கள், விளக்கங்கள் அளிக்கப்படும். இந்த பயிற்சியில் கலந்துகொள்ள உணவு, இருப்பிடம் ஆகியவற்றுடன் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. ஆகவே கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பயிற்சி அளிக்கப்படும் இடம், நேரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

The post கடலோர காவல்படை தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Tiruppurur ,Coast Guard ,Indian Coast Guard ,Indian Navy ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி அருகே நடுக்கடலில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி