×

பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் டிஎஸ்பி வழங்கினார் பிரஞ்ச்- ஆங்கிலேய படைக்கான போர் தினத்தினையொட்டி

வந்தவாசி, ஜன.23: பிரஞ்ச்- ஆங்கிலேயே படைக்கான போர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு டிஎஸ்பி மரக்கன்றுகளை வழங்கினார். பிரஞ்சு- ஆங்கிலேயே படைக்கு இடையே கடந்த 1760ம் ஆண்டு நடந்த போரில் ஆங்கிலேயே படை வெற்றி பெற்று இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி அமைப்பதற்கு அடித்தளமாக அமைந்த போர் வந்தவாசி போர் என்பது வரலாறு. இந்தபோர் குறித்து எக்ஸ்னோரா சங்கம் சார்பில் கருத்தரங்கம் மற்றும் வந்தவாசி போரில் பயன்படுத்திய பீரங்கி தெற்கு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இடத்தில் மாணவர்களுக்கு போர் குறித்த விவரம் தெரிவிப்பதற்கான நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு எக்ஸ்னோரா சங்க தலைவர் மலர் சாதிக்தலைமை தாங்கினார். செயலாளர் ராஜன், நிர்வாகிகள் பிரபாகரன், குமரன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக தாசில்தார் பொன்னுசாமி, டிஎஸ்பி ராஜீ, விழுப்புரம் தொல்லியல் துறை சார்ந்த காப்பாட்சியர் ரஷீத் கான் ஆகியோர் கலந்துகொண்டு வந்தவாசி போர் குறித்த செயல்பாடுகளையும், தகவமைப்புகள் பற்றிய விவரங்களையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர். தொடர்ந்து, இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு டிஎஸ்பி ராஜீ மரக்கன்றுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமு, கவிதா, பாபு, தட்ணாமூர்த்தி, தனிப்பிரிவு ஏட்டு எல்லப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் டிஎஸ்பி வழங்கினார் பிரஞ்ச்- ஆங்கிலேய படைக்கான போர் தினத்தினையொட்டி appeared first on Dinakaran.

Tags : DSP ,Battle Day ,French- ,British ,Army ,Vandavasi ,French-British War Day ,English army ,India ,war ,Dinakaran ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...