×

வீடுகளில் திருட முயன்ற பெங்களூரு வாலிபர் கைது பள்ளிகொண்டா பகுதியில்

பள்ளிகொண்டா, ஜன.23: பள்ளிகொண்டா பகுதிகளில் உள்ள வீடுகளில் திருட நோட்டமிட்ட பெங்களூரு வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். பள்ளிகொண்டா அடுத்த திப்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரது வீட்டில் கடந்த 20ம் தேதி பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அதனையடுத்து ராஜேஸ்வரி இதுபற்றி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், நேற்று காலை பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிதிரிந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பெங்களூரு பனசங்கரி பகுதியை சேர்ந்த பிரசாத்(25) என்பதும், அவர் பள்ளிகொண்டா பகுதிகளில் உள்ள வீடுகளில் திருட்டு சம்பவங்களை அரங்கேற்ற நோட்டமிட்டு திப்பசமுத்திரம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post வீடுகளில் திருட முயன்ற பெங்களூரு வாலிபர் கைது பள்ளிகொண்டா பகுதியில் appeared first on Dinakaran.

Tags : Pallikonda ,Bengaluru ,Rajeshwari ,Thippasamutram ,
× RELATED (வேலூர்) திருமண மண்டபத்தின்...