×

ஆட்டோ கவிழ்ந்து வட மாநில தொழிலாளி பலி

சேந்தமங்கலம், ஜன. 23: நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே மேலப்பாளையம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான சிமெண்ட் கல் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று மாலை தொழிற்சாலையில் இருந்து மினி ஆட்டோவில், சிமெண்ட் கற்களை ஏற்றிக்கொண்டு 3 தொழிலாளர்கள் ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, சிங்களாந்தபுரம் அருகே ஆட்டோவின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே தலைக்குப்புற ஆட்டோ கவிழ்ந்து. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த வட மாநில தொழிலாளி ராஜேஷ்ராம்(32) மீது கற்கள் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அணில்ராம்(27), சம்புராம்(32) ஆகியோர் படுகாயங்களுடன் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பேளுக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

The post ஆட்டோ கவிழ்ந்து வட மாநில தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : North ,State ,Senthamangalam ,Melapalayam ,Pelukurichi ,Namakkal district ,
× RELATED வடகிழக்கு மாநில மக்களை மோடி அரசு...