×

அரசியல் எதிரிகளை பழிவாங்குகிறார்: மலேசிய பிரதமர் மீது மாஜி பிரதமர் குற்றச்சாட்டு

புட்ராஜயா: மலேசியா முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மகாதிர் முகமதுவின்(98) மகன் மிர்சான் மகாதிர், முன்னாள் நிதி அமைச்சர் தைம் ஜெயினுதீன் ஆகியோர் வெளிநாட்டு வங்கிகளில் கோடிக்கணக்கான பணம் வைத்துள்ளதாக, கடந்த 2016ம் தேதி வெளியான பண்டோரா ஆவணங்களில் குறிப்பிட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மிர்சான் மற்றும் ஜெயினுதீனுக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தனது சொத்து விவரங்களை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மிர்சானுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், மகாதிர் நேற்று கூறுகையில்,‘‘ ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் மீது பங்கு வர்த்தகத்தில் முறைகேடு செய்ததாக புகார் உள்ளது. அன்வர் இப்ராகிம் தலைமையிலான ஆட்சியில் அரசுக்கு எதிரானவர்கள் மீது சட்டம் பிரயோகிக்கப்படுகிறது. அரசை ஆதரிப்பவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியும். அரசியல் காரணங்களுக்காக சட்டம் பயன்படுத்தப்படுகிறது’’ என குற்றம் சாட்டினார்.

The post அரசியல் எதிரிகளை பழிவாங்குகிறார்: மலேசிய பிரதமர் மீது மாஜி பிரதமர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Ex ,PM ,Malaysian ,Putrajaya ,Pandora ,Mirza Mahathir ,Mahathir Mohamad ,Finance Minister ,Taim Zainuddin ,Dinakaran ,
× RELATED ஐதராபாத்தில் பேருந்து சேவை குறைப்பு!!