- அமைச்சர்
- உதயநிதி
- சேலம்
- திமுக இளைஞர்களின் 2வது மாநில மாநாடு
- பெத்தநாயக்கன்பாளையம்
- சேலம் மாவட்டம்
- உதயநிதி ஸ்டாலின்
- தின மலர்
சேலம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சேலம் வந்த இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு திடலில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தொடர்ந்து நேற்றுமுன்தினம் காலை தொடங்கி கடைசி வரை மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாநாடு முடிந்ததும் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கார் மூலம் சென்னை திரும்பிய நிலையில், உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் தங்கினார்.
நேற்று காலை மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்த அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட செயலாளர்கள் சிவலிங்கம், ராஜேந்திரன் எம்எல்ஏ, செல்வகணபதி மற்றும் 60க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அவர்கள் அனைவருக்கும் தங்க மோதிரம் பரிசளித்ததுடன் அதனை அவர்களுக்கு அணிவித்து மகிழ்ந்தார். தொடர்ந்து நேற்று மதியம் 12.50 மணிக்கு சேலம் காமலாபுரத்தில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில்மகேஷ், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி ஆகியோரும் சென்றனர்.
The post மாநாட்டில் சிறப்பான பணி 60 நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம்: அமைச்சர் உதயநிதி பரிசளித்தார் appeared first on Dinakaran.