×

மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் ரயில் மின்கம்பியில் உரசி கருகினார்

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையத்தில் புதிய நடை மேம்பாலம் உள்ளது. நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த ேமம்பாத்தின் மீது ஏறிய ஒரு வாலிபர் திடீரென கீழே குதித்துள்ளார். அப்போது, அவ்வழியாக செல்லும் உயர் மின்னழுத்த கம்பியின் மீது உரசியதில் கருகிய நிலையில் தூக்கி வீசப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் வாலிபரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலைக்கு முயன்ற வாலிபர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த புனல்பாஸ்கி (33) என்பது தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் ரயில் மின்கம்பியில் உரசி கருகினார் appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Ranipet district ,
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில்...