×

ஆந்திராவில் காங்கிரஸ் தனித்து போட்டி: ஷர்மிளா அறிவிப்பு

திருமலை: ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை, 25 மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று என்று மாநில தலைவர் ஷர்மிளா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளாவை கட்சியின் தலைமை நியமித்து அறிவித்தது. இதையடுத்து ஒய்.எஸ்.ஷர்மிளா நேற்றுமுன்தினம் விஜயவாடாவில் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் ஒரு பெண் என்பதால் என்னை சிறுமைப்படுத்த வேண்டாம். ஆந்திரா எனது பிறந்த வீடு, தெலங்கானா எனது புகுந்த வீடு, தெலங்கானாவில் சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி விட்டேன். ஆந்திராவில் காங்கிரஸ் 175 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 25 எம்பி தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும். ஜனவரி 23ம் தேதி (இன்று) முதல் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். 9 நாட்களில் ஒரு நாளைக்கு 3 மாவட்டங்களில் இருந்து பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைப்பு நடைபெறும். 24ம் தேதி(நாளை) முதல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து விருப்ப மனு பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆந்திராவில் காங்கிரஸ் தனித்து போட்டி: ஷர்மிளா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Andhra Pradesh ,Sharmila ,Tirumala ,State President ,YS ,Vijayawada ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...