×

கீழக்கரையில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு போட்டி: 3,669 மாடுபிடி வீரர்கள், 9,312 காளைகள் பதிவு!

மதுரை: கீழக்கரையில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள நிலையில் 3,669 மாடுபிடி வீரர்கள், 9,312 காளைகள் பதிவு செய்துள்ளார். கீழக்கரையில் ரூ.44 கோடியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு உலகப்புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில், வகுத்துமலை அடிவாரத்தில் ரூ.44 கோடியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நாளை மறுநாள் 24-ம் தேதி நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு அரங்கத்தை திறந்து வைக்கிறார். அதன்பின்னர் அந்த அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் பதிவின் மூலம், 9,312 காளைகளும், 3,669 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

இதில் தகுதியான நபர்கள் மற்றும் காளைகள் தேர்வு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், 24-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள், திறப்பு விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 

The post கீழக்கரையில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு போட்டி: 3,669 மாடுபிடி வீரர்கள், 9,312 காளைகள் பதிவு! appeared first on Dinakaran.

Tags : Jallikatu match ,Madurai ,Alakkara ,Jallikatu Stadium ,Jallikat ,Alanganallur ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை