×

ராமர் கோயில் விழா நேரலை விவகாரம்: வாய்மொழி உத்தரவை வைத்து எந்த வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதி

டெல்லி: அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் தனியார் மற்றும் அரசு கோயில்களில் நேரலைக்கான அனுமதி மறுப்பதாக தெரிவித்தும், ராமர் பெயரில் பூஜை, பஜனை, ஊர்வளம், அன்னதானம், அர்ச்சனை ஆகியவற்றிற்கு அனுமதிக்க கூடாது என காவல்துறைக்கு தமிழ்நாடு முதல்வர் உத்தரவு பிறபித்துள்ளதாகவும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தி பாஜகவை சேர்ந்த வினோத் பன்னீர் செல்வம் சார்பில் ரிட் மனுவை வழக்கஞர் ஜி.பாலாஜி நேற்றிரவு தக்கல் செய்திருந்தார்.

இந்த வழ்க்கை அவசர வழக்காக விசாரித்த கோரிக்கை வைக்கபட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரனை தொடங்கியஉடன் மனு தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமர் பெயரில் பூஜை, பஜனை, ஊர்வளம், அன்னதானம், அர்ச்சனை ஆகியவற்றிற்கு அனுமதிக்க கூடாது என வாய்மொழி உத்தரவு இருப்பதால் ட்க்ஹனியார் கோயில்களிலும் இந்த நேரலை நடத்துவதில் சிக்கல் உள்ளது. அர்ச்சனை, சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என தெரிவித்தார்.

வாய்மொழி உத்தரவை வைத்து எவ்வித உத்தரவையும் எவ்வாறு பிறப்பிப்பது என நீதிபதிகள் கேட்டபோது, ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனியார் கோயில்களில் அனுமதி மறுப்பதை ஏற்றுகொள்ள முடியாது. அவ்வாறு எவ்வித சட்டமும் இல்லை. இந்த நாட்டில் அரசியலமைப்பு சட்டப்படி வழங்கபட்டுள்ள உரிமைகள் என்பது வழங்கப்படவேண்டும் என வாதத்தை முன்வைத்தார்.

அப்போது நீதிபதிகல் வாய்மொழி உத்தவை ஏற்று காவல்துறையினர் செயல்படகூடாது. சட்டப்படி எதற்கு அனுமதிக்கபட்டுள்ளதோ அதனை அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நேரலைக்கு எந்த வித தடையும் இல்லை. இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என வாதிட்டார்

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு உத்தரவிடக்கோரிய ரிட் மனுவுக்கு ஜனவரி 29-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு இந்த விசாரணையை ஜனவரி 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும் ராமர் பெயரில் பூஜை, பஜனை, ஊர்வளம், அன்னதானம், அர்ச்சனை ஆகியவற்றை வாய்மொழி உத்தரவை கொண்டு தடுக்க கூடாது என உத்தரவிடபட்டுள்ளது.

The post ராமர் கோயில் விழா நேரலை விவகாரம்: வாய்மொழி உத்தரவை வைத்து எந்த வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதி appeared first on Dinakaran.

Tags : Ramar Temple Festival ,Supreme Court ,Delhi ,Ayodhya Ramar Temple ,Tamil Nadu ,Pooja ,Bhajan ,Purvalam ,Annathanam ,Arsanai ,Ramar Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...