×

தனியார் கோயில்களில் ராமர் கோயில் குடமுழுக்கை நேரலை செய்ய போலீஸ் அனுமதி தேவையில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ராமர் கோயில் திறப்பு நிகழ்வை தனியார் கோயில்கள், திருமண மண்டபங்களில் நேரலை செய்ய போலீஸ் அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறநிலையத்துறை கீழுள்ள கோயில்களில் நேரலை செய்ய கோயில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த ஏற்கனவே அனுமதி கோரப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கைக்கு காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து விவேகானந்தா இந்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் அயோத்தி செல்ல முடியாத பக்தர்களுக்கு பஜனை மற்றும் அன்னதான நிகழ்ச்சிக்கு தாங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ஆனால் நிகழ்ச்சி நடத்த கூடாது எனக்கூறி காவல்துறையினர் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக இன்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி அயோத்தி குடமுழுக்கு நிகழ்ச்சி தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரடி ஒளிபரப்பு மற்றும் பூஜைக்கு;ல் மேற்கொள்வதற்கு காவல்துறையினர் அனுமதி தேவை இல்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post தனியார் கோயில்களில் ராமர் கோயில் குடமுழுக்கை நேரலை செய்ய போலீஸ் அனுமதி தேவையில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ram ,Temple ,CHENNAI ,Chennai High Court ,Ram Temple ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தால்...