×

வாகனம் மோதி விவசாயி பலி

தேன்கனிக்கோட்டை: தளி அருகே உள்ள தளி கொத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சியப்பா(65). விவசாயியான இவர், நேற்று முன்தினம் மதியம், ஒசபுரம் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி, படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாகனம் மோதி விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Pachiyappa ,Thali Kothanur ,Thali ,Oshapuram ,Dinakaran ,
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே பிரசவ வலியால்...