×

நியாயமான தேர்தல் நடைபெறாவிட்டால் பாக்.கில் நிச்சயமற்றத்தன்மை ஏற்படும்: இம்ரான் கான் எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறாத பட்சத்தில்,அது அரசியல் நிச்சயமற்றத்தன்மைக்கு வழிவகுக்கும் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானுக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த நாட்டில் வரும் பிப்ரவரி 8ம் தேதி பொது தேர்தல் நடக்கிறது. சிறையில் உள்ள இம்ரான் கான் இணைய தளம் வாயிலா அளித்த பேட்டியில் கூறுகையில்,‘‘தெஹ்ரீக் இன்சாப் கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் பங்கேற்பதை தடுக்கும் வகையில் அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பிரசாரத்துக்காக பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு கட்சி மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நியாயமான முறையில் தேர்தல் நடத்தாவிட்டால் நாட்டில் அரசியல் நிலையற்றத்தன்மை ஏற்படும். மக்களுடன் மிக நெருக்கமாக உள்ள தெஹ்ரீக் கட்சியை உடைக்க முடியவில்லை.கட்சியை சேர்ந்த தலைவர்கள் வேறு கட்சியில் சேர்ந்தால் அவர்களுடைய அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும். உள்கட்சி தேர்தல் நடத்துவது குறித்த வழக்கில் முடிவெடுப்பதில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே தாமதப்படுத்தியது.இதனால், கட்சியின் சின்னமான கிரிக்கெட் மட்டையை ஒதுக்குவதற்கு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. நாட்டை விட்டு ஓடியவரை மீண்டும் பாகிஸ்தானுக்கு கூட்டி வந்து அரசியலில் அவரை திணித்தால் நாட்டுக்கு மிக பெரிய இழப்பு ஏற்படும்’’ என்றார்.

The post நியாயமான தேர்தல் நடைபெறாவிட்டால் பாக்.கில் நிச்சயமற்றத்தன்மை ஏற்படும்: இம்ரான் கான் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Buck ,Gill ,Imran Khan ,Islamabad ,Pakistan ,Pakistan Tehreek Insaf Party ,Gil ,Dinakaran ,
× RELATED தோல்வியை சந்தித்தது வருத்தம்...