×

கண்ட இடங்களில் குப்பை போடக்கூடாது பாஜ தொண்டர்களுக்கு நிதியமைச்சர் கண்டிப்பு

 

சென்னை, ஜன.22: மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கண்ட இடங்களில் குப்பையை போடக் கூடாது என, பாஜ தொண்டர்களை கடிந்து கொண்டார். மாமல்லபுரம் ஐந்து ரதம் புராதன சின்னம் அருகே உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் நேற்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வெளியே வந்த நிர்மலா சீத்தாராமனுக்கு, பாஜ தொண்டர்கள் நினைவு பரிசு வழங்கினர்.

அப்போது, நினைவு பரிசு வழங்கிய தொண்டர்கள் சிலர் நினைவு பரிசின் கவர்களை அங்கேயே பிரித்து வீசினர். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த நிதியமைச்சர் அங்கிருந்த தொண்டர்களை நீங்களே குப்பையை கண்ட இடங்களில் வீசினால், பொதுமக்கள் எப்படி குப்பையை குப்பை தொட்டிகளில் போடுவார்கள் என சரமாரி கேள்வி எழுப்பி, தொண்டர்களை அருகில் அழைத்து குப்பையை குப்பை தொட்டியில்தான் போட வேண்டும் என கடிந்த முகத்துடன் அறிவுரை வழங்கி காரில் ஏறி புறப்பட்டார்.

The post கண்ட இடங்களில் குப்பை போடக்கூடாது பாஜ தொண்டர்களுக்கு நிதியமைச்சர் கண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Finance Minister ,BJP ,Chennai ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,Mamallapuram ,Mamallapuram Five Ratham ,
× RELATED ‘ஒன்னுமே செய்யாம லாபம் அள்ளுறீங்களே...