×

ஆந்திரா காங்கிரஸ் தலைவராக ஷர்மிளா பதவியேற்பு: பேரணியை போலீஸ் தடுத்ததால் போராட்டம்

திருமலை: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகனின் தங்கையும், முன்னாள் முதல்வரான மறைந்த ராஜசேகரரெட்டியின் மகளுமான ஒய்.எஸ்.ஷர்மிளாவை ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக கட்சியின் தலைமை நியமித்து அறிவித்தது. இதையடுத்து ஒய்.எஸ்.ஷர்மிளா நேற்று விஜயவாடாவில் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க சென்றார். அப்போது எனிகேபாடு என்ற இடத்தில் தொண்டர்களுடன் ஷர்மிளா கட்சி தொண்டர்கள், தலைவர்கள் கார்களுடன் கான்வாயில் பேரணியாக சென்றார். இதனை போலீசார் வழிமடக்கி நிறுத்தி கான்வாய் செல்ல அனுமதி இல்லை என கூறினர்.

இதனால் ஷர்மிளா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் பேசுகையில், ‘ காங்கிரஸ் கட்சியை பார்த்து அரசு பயப்படுகிறதா?’ என போலீசாரை பார்த்து கேள்வி எழுப்பினார். சிறிது நேரம் கழித்து போலீசார் பேரணியை அனுமதித்தனர். இதனையடுத்து ஊர்வலமாக விஜயவாடா கானூரில் உள்ள கல்யாண மண்டபத்திற்கு சென்ற ஒய்.எஸ்.ஷர்மிளா மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார்.

The post ஆந்திரா காங்கிரஸ் தலைவராக ஷர்மிளா பதவியேற்பு: பேரணியை போலீஸ் தடுத்ததால் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Sharmila ,Andhra Congress ,Tirumala ,YS ,Andhra ,Chief Minister ,Jaganmohan ,Rajasekara Reddy ,Andhra Pradesh Congress ,President ,Vijayawada ,State Congress ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட...