×

பெருமாள் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை

தொண்டி,ஜன.21: தொண்டியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத உந்தி பூத்த பெருமாள் கோயில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு பூஜையுடன் துவங்கியது. இதையடுத்து கொடி மரம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆனையர் பழனிக்குமார், துணை ஆனையர் செல்வராஜ், செயல் அலுவலர் மகேந்திர பூபதி, பாலாஜி, தக்கர் சண்முகசுந்தரம், காவல் துறை, பேரூராட்சி நிர்வாகிகள் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்கள் நாராயணா, கோவிந்தா கோஷமிட கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக எந்திரம், தங்கம், நவரெத்தின கல், வெள்ளி உள்ளிட்டவை வைத்து பூஜை செய்யப்பட்டது. மாலை யாகசாலை பூஜை நடைபெற்றது. இன்று கொடி மர கும்பாபிஷேகம் நடைபெறும்.

The post பெருமாள் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை appeared first on Dinakaran.

Tags : of ,Perumal ,Thondi ,Sridevi ,Poomadevi ,Sametha Undi ,Bhootha ,Kumbabishekam ,Perumal temple ,
× RELATED மழலை வரமருளும் பத்மநாப பெருமாள்