×

உருண்டை வெல்லம் மூட்டைக்கு ரூ.60 வரை உயர்வு

ஈரோடு, ஜன. 21: ஈரோடு அடுத்த சித்தோடு வெல்ல மார்க்கெட்டில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏலம் மூலம் வெல்ல மூட்டைகள்(30 கிலோ) விற்பனை செய்யப்படும். இதன்படி, இந்த வாரம் கூடிய மார்க்கெட்டில் நாட்டு சர்க்கரை 3,600 மூட்டையும், உருண்டை வெல்லம் 3,000 மூட்டையும், அச்சு வெல்லம் 200 மூட்டையும் வரத்தானது.

இதில், நாட்டுச்சர்க்கரை மூட்டை ஒன்று ரூ.1,300 முதல் ரூ.1,400 வரையும், உருண்டை வெல்லம் ரூ.1,380 முதல் ரூ.1,480 வரையும், அச்சு வெல்லம் ரூ.1,450 முதல் ரூ.1,520 வரை என்ற விலையில் விற்பனையானது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் வரத்து அதிகரித்தும், அச்சு வெல்லம் வரத்து குறைந்தும் காணப்பட்டது. இதனால், கடந்த வாரத்தை விட நாட்டு சர்க்கரை விலை மூட்டைக்கு ரூ.30 வரை குறைந்தும், உருண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் ரூ.60 வரை உயர்ந்தும் விற்பனையானதாக மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post உருண்டை வெல்லம் மூட்டைக்கு ரூ.60 வரை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Erode ,Chithod jaggery market ,Dinakaran ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...