×

நீடாமங்கலம் அருகே கனமழை வயலில் சாய்ந்த சம்பா நெல் பயிர்

நீடாமங்கலம், ஜன. 21: நீடாமங்கலம் அருகே பெய்த கனமழை காரணமாக வயலில் சம்பா நெல் பயிர்கள் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வேளாண் கோட்டப் பகுதிகளான கிளரியம், கப்பலுடையான் பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அறுவடைக்கு நெற்பயிர்கள் தயாராகி இருந்தது. இந்நிலையில் திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழை காரணமாக கிளரியம், கப்பலுடையான் பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் வயலில் சாய்ந்தது.

இதனால் தரையோடு தரையாக நெல் மணிகள் ஒட்டி கொண்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடன் வாங்கியும் இருந்த கொஞ்ச நகைகளை அடகு வைத்தும், அருகில் உள்ள மின்மோட்டார் வைத்துள்ளவர்களிடம் இரவு கண் விழித்து நீர் பாய்ச்சியும் தற்போது எவ்வித பயனும் இல்லை. பயிர்களை நன்றாக வளர்த்து பாதுகாத்து அறுவடைக்கு தயாராக வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கன மழையால் நெல் பயிர்கள் சாய்ந்து தரையில் படிந்துள்ளது. இதனால் மகசூல் இழப்பு அதிகம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என கவலையுடன் தெரிவித்தனர்.

The post நீடாமங்கலம் அருகே கனமழை வயலில் சாய்ந்த சம்பா நெல் பயிர் appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Koradacherry ,Tiruvarur district ,Klarium ,Karupudayan Pathur ,Dinakaran ,
× RELATED தாய் திட்டியதால் மண்ணெண்ணெய் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை