×

தூத்துக்குடியில் மதுவில் விஷம் கலந்து குடித்த பெயிண்டர் சாவு

தூத்துக்குடி, ஜன.21: தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 4வதுதெருவைச் சேர்ந்த சூசை ஆரோக்கியத்தின் மகன் செல்வராஜ் (49). பெயிண்டிங் வேலைக்கு ெசன்றுவந்த இவர், குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் குடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த செல்வராஜ் கடந்த 2ம்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது மதுவில் விஷம் கலந்து குடித்தார். பின்னர் இதுகுறித்து தெரியவந்ததும் உறவினர்கள், அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ( 19) பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வடபாகம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாராம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

The post தூத்துக்குடியில் மதுவில் விஷம் கலந்து குடித்த பெயிண்டர் சாவு appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Selvaraj ,Soosai Arogya ,4th Street, Sundaravelpuram, Thoothukudi ,
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!