×

அம்பை சட்டமன்ற தொகுதி அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

அம்பை ஜன.21: அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. அம்பை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இசக்கி சுப்பையா எம்எல்ஏ தலைமை வகித்தார். மாநில ஜெ. பேரவை இணைச்செயலாளர் சிவன் பாபு, மாவட்ட அவைத்தலைவர் கூனியூர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் செல்வி வேலுசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் செவல் முத்துசாமி, பார்வதி பாக்கியம், மாவட்ட நிர்வாகிகள் மாரிமுத்து, கிறாஸ் இமாகுலேட், மின்னல் மீனாட்சி, சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் அம்பை துர்க்கை துரை, சேரை மாரிச்செல்வம், அம்பை நகர செயலாளர் அறிவழகன், கல்லிடை பேரூர் செயலாளர் முத்து கிருஷ்ணன், ஒன்றிய துணைச்செயலாளர் பிராங்க்ளின், கவுன்சிலர்கள் சிவக்குமார், மாரிராஜ் உள்பட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post அம்பை சட்டமன்ற தொகுதி அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ambai ,Assembly Constituency ,Adimuka Booth Committee Consultation Meeting ,Ambasamudram ,Izaki Supbaia MLA ,Nella ,Suburnagar ,District ,Ambai Assembly Constituency Office ,State ,J. Bargain ,Ambai Assembly Constituency Adimuka Booth Committee Consultation Meeting ,Dinakaran ,
× RELATED அம்பையில் போதையில் ரகளை செய்தவர்கள் மீது வழக்கு