×

வங்கதேச எல்லையை போன்று மியான்மர் எல்லையில் வேலி அமைக்கப்படும்: உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி

கவுகாத்தி: அசாம் காவல் துறையில் கமாண்டோக்கள் பயிற்சி பெற்ற முதலாவது பேட்ச் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பேசிய, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,‘‘மியான்மர் எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் மக்கள் சுதந்திரமாக நடமாடும் வசதியை நிறுத்துவது பற்றி ஒன்றிய அரசு மறு ஆய்வு செய்து வருகிறது. இந்தியா-வங்கதேச எல்லையை போன்று மியான்மர் எல்லையிலும் வேலி அமைக்கப்படும். அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடப்பது ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பெருமையாகும். உலகின் மிக பெரிய வல்லரசாக இந்தியா உருவாகி வரும் நேரத்தில் இது நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது’’ என்றார்.

The post வங்கதேச எல்லையை போன்று மியான்மர் எல்லையில் வேலி அமைக்கப்படும்: உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி appeared first on Dinakaran.

Tags : Myanmar border ,Bangladesh border ,Home Minister ,Amit Shah ,Guwahati ,Assam Police Department ,Union ,India ,
× RELATED மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து