×

ம.பி.தேர்தல் தோல்வி காங். தலைவர்கள் 150 பேருக்கு நோட்டீஸ்

போபால்: மத்தியப்பிரதேச சட்டபேரவை தேர்தலில் 230 தொகுதிகளில் 66 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தேர்தலில் தோல்வியடைந்த 164 வேட்பாளர்களில் பெரும்பான்மையினர் கட்சியின் முக்கிய தலைவர்கள் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரிலும், பொதுத்தேர்தலுக்கு முன்னதாக கட்சியை மறுசீரமைக்கவும் காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்த புகாருக்குள்ளான 150 காங்கிரஸ் தலைவர்களுக்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் 10 நாட்களில் தகுந்த பதிலளிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கட்சியில் இருந்து நீக்குவது உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

The post ம.பி.தேர்தல் தோல்வி காங். தலைவர்கள் 150 பேருக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Bhopal ,Congress ,Madhya Pradesh assembly elections ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இன்று டெல்லி பயணம் ரத்து!