×

அமெரிக்க அதிபர் பதவிக்கு நிக்கி ஹாலே தகுதியற்றவர்: முன்னாள் அதிபர் டிரம்ப் விமர்சனம்

அட்லாண்டா: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட நிக்கி ஹாலே தகுதியற்றவர் என முன்னாள் அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாய கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டிரம்ப்(77), தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான நிக்கி ஹாலே(51) மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி(38) ஆகியோரும் போட்டியிட போவதாக அறிவித்திருந்தனர். இதில் விவேக் ராமசாமி விலகி விட்டார்.

இந்நிலையில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளர் தேர்வில் களத்தில் இருக்கும் டிரம்ப், இன்னொரு வேட்பாளர் நிக்கி ஹாலேவை பற்றி விமர்சனம் செய்துள்ளார். அவர் தன் சமூக வலைதளத்தில், “தென்கரோலினாவின் பாம்பெர்க்கில் பிறந்த நிமரதா நிக்கி ஹாலி ரந்தவா திருமணமான பிறகு ஹாலே என்ற குடும்ப பெயர் வைத்து கொண்டார். அவர் அமெரிக்காவின் கரோலினாவில் பிறந்திருந்தாலும் அவரது பெற்றோர்கள் அமெரிக்க குடிமக்கள் இல்லை. மேலும் அவர் அதிபர் பதவி வகிக்க கூடியவர் இல்லை. நான் அதைச் சொன்னால், அவர் தேர்தலில் எனக்கு துணை அதிபராக போட்டியிட தேர்ந்தெடுக்கப்படப் போவதில்லை என்று அர்த்தம்” என தெரிவித்துள்ளார்.

டிரம்ப் பயப்படுகிறார்
டிரம்பின் விமர்சனம் குறித்து நிக்கி ஹாலே கூறும்போது, “தன் மீதான குற்றச்சாட்டுகளால் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தால் டிரம்ப் இவ்வாறு விமர்சனம் செய்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

The post அமெரிக்க அதிபர் பதவிக்கு நிக்கி ஹாலே தகுதியற்றவர்: முன்னாள் அதிபர் டிரம்ப் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Nikki Haley ,President ,United States ,President Trump ,Atlanta ,US ,US presidential election ,Democratic Party ,Joe ,US President ,Trump ,
× RELATED இத்தாலியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில்...