×

சிரியாவில் இஸ்ரேல் விமான தாக்குதல் ஈரான் ராணுவ அதிகாரி உட்பட 4 பேர் பலி

டமாஸ்கஸ்: சிரியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் துணை ராணுவ படை தளபதி உட்பட 4 பேர் பலியாயினர். டமாஸ்கஸின் மேற்கு பகுதியான மஸே பகுதியில் வெளிநாட்டு தூதரகங்கள் உள்ளன. அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஈரான் துணை ராணுவ படை உளவு பிரிவு அதிகாரிகள், ஆலோசகர்கள் தங்கியிருந்தனர். இந்நிலையில், இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் கட்டிடம் இடிந்து சின்னாபின்னமானது. இதில், ஈரான் துணை ராணுவ படையின் உளவு பிரிவு தளபதியான ஜெனரல் சடேக் ஒமித்ஸாடே, உதவி அதிகாரி ஹஜ் குலாம் உட்பட 4 பேர் பலியாயினர் என்று ஈரான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. சிரியா நாட்டின் மனித உரிமைகள் அமைப்பு தலைவர் அப்துர்ரஹ்மான் கூறுகையில்,‘‘அந்த கட்டிடத்தில் ஈரான் ஆதரவு குழு ஆலோசனை நடத்திய போது தாக்குதல் நடந்தது. இதில் 5 ஈரானியர்கள், ஒரு சிரியா நாட்டுக்காரர் பலியானார்.4 பேர் மாயமாகி உள்ளனர்’’ என்றார்.

The post சிரியாவில் இஸ்ரேல் விமான தாக்குதல் ஈரான் ராணுவ அதிகாரி உட்பட 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Damascus ,Iran ,Syria ,Mazay ,
× RELATED தேர்தல் பிரசாரத்தின்போது...