கன்னியாகுமரி: முகூர்த்த தினத்தை ஒட்டி கன்னியாகுமரி தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.2,000 வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.5,000ஆக விலை அதிகரித்துள்ளது. பிச்சிப்பூ கிலோ ரூ.1,500க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.150க்கு விற்பனையான சம்பங்கி தற்போது ரூ.600ஆக விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. ரூ.70க்கு விற்பனையான பன்னீர் ரோஜா ரூ.250க்கும் கிரேந்தி ரூ.150க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் திண்டுக்கல்லில் பனிப்பொழிவு, முகூர்த்த நாள் என்பதால் திண்டுக்கல் மலர்ச்சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.5,000க்கும், முல்லைப் பூ ரூ.2,000க்கும், ஜாதிப்பூ, கனகாம்பரம், காக்கரட்டான் தலா ரூ.1,500க்கும் விற்பனையாகிறது.
The post முகூர்த்த தினத்தை ஒட்டி கன்னியாகுமரி தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.