×

காரைக்குடியில் பழநி  பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்புக்கு ஒளிரும் பட்டைகள்: விபத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை

காரைக்குடி: காரைக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏரளானமான பக்தர்கள் பழனிக்கு பாத யாத்திரையாக செல்வது வழக்கம். இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் பாதயாத்திரையை துவங்கி உள்ளனர். சாலையோரமாக பக்தர்கள் நடந்து செல்கின்றனர். இந்த நிலையில் பக்தர்கள் செல்வது தெரியாமல் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்பட்டுவருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காரைக்குடி வடக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் கோவிலூர் செக்போஸ்ட் பகுதியில் போலீசார் பாதயாத்திரை பக்தர்கள் கொண்டு செல்லும் பையில் ஒளிரும் ரிப்ளக்டர் ஸ்டிக்கர்களை ஒட்டினர். இதன் மூலம் இரவு நேரத்தில் பக்தர்கள் நடந்து செல்வதை வாகன ஓட்டிகள் தெரிந்துகொள்ள முடியும்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் கூறுகையில், ‘’அரசு உத்தரவின்படி விபத்தை தடுக்க போலீசார் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எஸ்.பி அரவிந்த், ஏஎஸ்பி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பக்தர்கள் கொண்டு செல்லும் பைகளில் ரிப்ளக்டர் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளோம். விபத்தை தடுக்க இது பெரும் உதவியாக இருக்கும்’’ என்றார்.

The post காரைக்குடியில் பழநி  பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்புக்கு ஒளிரும் பட்டைகள்: விபத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani ,Karaikudi ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்