×

ஐதராபாத்தில் நடந்த விழாவில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. சஞ்சய் ஷா உயிரிழப்பு..!!

ஐதராபாத்: ஐதராபாத்தில் நடந்த விழாவில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. சஞ்சய் ஷா உயிரிழந்தார். ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் 25ம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு தனது குழுவினருடன் விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. சஞ்சய் ஷா வந்திருந்தார். அங்கு மரத்தால் ஆன பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மேடை, கிரேன் மூலம் கான்கிரீட் மேடையில் இருந்து 20 அடி உயரத்துக்கு உயர்த்தப்பட்டது. இந்த செயலில் இருபுறமும் இரண்டு அடுக்குகள் கொண்ட 6 மிமீ இரும்பு கம்பி இருந்தது.

துரதிர்ஷ்டவசமாக, நிகழ்ச்சியின் போது, இரும்பால் ஆன நுழைவு வாயிலின் செயின் திடீரென அறுந்து கீழே இருந்தவர்கள் மீது விழுந்தது. அச்சமயம், இரும்பால் ஆன நுழைவு வாயிலுக்குள் சென்ற விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. சஞ்சய் ஷா இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். மேலும், நிறுவனத்தின் தலைவர் விஸ்வநாத் ராஜ் தட்லாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

அங்கு பலத்த காயமடைந்த சிஸ்டெக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. சஞ்சய் ஷா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே நேரத்தில் விஸ்வநாத் ராஜின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜானகிராம் அளித்த புகாரின் பேரில், ராமோஜி பிலிம் சிட்டியின் நிகழ்வு மேலாண்மை ஆணையமான உஷா கிரண் ஈவன்ட்ஸ் மீது அப்துல்லாபூர்மேட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஐதராபாத்தில் நடந்த விழாவில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. சஞ்சய் ஷா உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : CEO ,Vistex ,Hyderabad ,Sanjay Shah ,Ramoji Film City, Hyderabad ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...