×

திருப்புத்தூர் அருகே பாதயாத்திரை காவடி குழுவிற்கு வரவேற்பு

திருப்புத்தூர்: காரைக்குடி பள்ளத்தூர் அருகே மணச்சை பாளையநாட்டார் காவடி குழுவினர் 46ம் ஆண்டு காவடி பயணத்தை குன்றக்குடியில் தொடங்கினர். வேல் பூஜை முடிந்ததும் குருசாமி முருகுசோலை, சண்முக சேவா சங்கத்தலைவர் துரைசிங்கம் தலைமையில் காவடிகள் புறப்பட்டது. பிள்ளையார்பட்டி, நகர வயிரவன்பட்டி ஆகிய இடங்களில் காவடிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இக்காவடி குழுவில் பள்ளத்தூர், நேமத்தான்பட்டி கானாடுகாத்தான், கொத்தரி, மணச்சை, வடகுடி, காரியாபட்டி, கண்டனூர், பாளையூர், வேலங்குடி, கோட்டையூர், காரைக்குடி, கழனிவாசல், ஓ.சிறுவயல் பகுதியைச் சேர்ந்த 175 பேர் காவடி சுமந்து செல்கின்றனர். காவடிகள் நேற்று காலை 10 மணியளவில் திருப்புத்தூர் திருத்தளிநாதர் ஆலயம் வந்தடைந்து வழிபாட்டிற்கு பின் காரையூர் சென்றது. அங்கு காவடிகளுக்கு பெண்கள் குலவையிட்டு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் நண்பகல் 3 மணியளவில் காவடிகள் புறப்பட்டு மருதிப்பட்டியை அடைந்தது. பின்னர் சிங்கம்புணரி, சமுத்திராபட்டி, திண்டுக்கல் வழியாக ஜன.24ம் தேதி பழனியை அடைந்து சண்முகசேவா மடத்தில் மகேஸ்வர பூஜை, காவடிபூஜை, அன்னதானம் முடித்து தைப்பூச மறுநாள் ஜன.26 ல் மலையேறி சாமிதரிசனம் மேற்கொள்ள உள்ளனர்.

The post திருப்புத்தூர் அருகே பாதயாத்திரை காவடி குழுவிற்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Padayatrai Kavadi ,Tiruputhur ,Manachai Palayanattar Kavadi ,Kavadi ,Kunrakkudi ,Pallathur ,Karaikudi ,Vel Puja ,kavadis ,Kuruswamy Murugucholai ,Shanmukha ,Seva Sangam ,Duraisingham ,Pilliyarpatti ,Nagara Vairavanpatti ,Padayatra Kavadi ,Dinakaran ,
× RELATED அதிமுக நோட்டீசுடன் பணம் பட்டுவாடா: முதியவர் சிக்கினார்