×

ஐதராபாத்தில் நடந்த விழாவில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. உயிரிழப்பு!!

ஐதராபாத்: ஐதராபாத்தில் நடந்த விழாவில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. சஞ்சய் ஷா உயிரிழந்தார். ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் 25ம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு தனது குழுவினருடன் சஞ்சய் ஷா வந்தபோது இரும்பால் ஆன நுழைவு வாயிலுக்கு சென்றனர். இரும்பால் ஆன நுழைவு வாயிலின் செயின் திடீரென அறுந்து விழுந்ததில் சஞ்சய் ஷா படுகாயம் அடைந்தார். பலத்த காயமடைந்த விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. சஞ்சய் ஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

The post ஐதராபாத்தில் நடந்த விழாவில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : CEO ,Vistex ,Hyderabad ,Sanjay Shah ,Ramoji Film City, Hyderabad ,Irumbal ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி...