×

பட்டுக்கோட்டை அருகே சாலையோர தடுப்புச் சுவர் மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை அருகே மனோரா என்ற இடத்தில் சாலையோர தடுப்புச் சுவர் மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்த வேன், தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சின்னபாண்டி (35), பாக்கியராஜ் (60), ஞானம்மாள் (60), ராணி (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post பட்டுக்கோட்டை அருகே சாலையோர தடுப்புச் சுவர் மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Patukkot ,Patukota ,Manora ,Tuticorin ,Velanganchi ,Dinakaran ,
× RELATED டெல்டாவில் விடிய விடிய கனமழை: பட்டுக்கோட்டையில் 16 செ.மீ. மழை பதிவு