×

நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை சேதுபாவாசத்திரம் வட்டார விவசாயிகளுக்கு பயிற்சி

 

பேராவூரணி,ஜன.20: சேதுபாவாசத்திரம் வட்டாரம், முதுகாடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி பயிற்சி முகாமிற்கு தலைமை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் வரவேற்றார். பயிற்சி முகாமை துவக்கி வைத்து உதவி இயக்குநர் பேசுகையில், மண்ணின் வகையை பொறுத்து 10 சதுர மீட்டர் முதல் 20 சதுர மீட்டர் வரை பாத்தி அமைக்கலாம்.

ஏக்கருக்கு 50 கிலோ விதையைப் பயன்படுத்த வேண்டும் என்றார். பட்டுக்கோட்டை, வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் ஆனந்தன்., பேசினார். பயிற்சி முகாமில் சேதுபாவாசத்திரம் துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் தமிழழகன், ஜெயக்குமார், தொகுதி உதவி வேளாண்மை அலுவலர் நிவாசன் மற்றும் பயிர்அறுவடை பரிசோதனையாளர் வசந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

The post நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை சேதுபாவாசத்திரம் வட்டார விவசாயிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Sethubavasatram district ,Peravoorani ,Mudugadu ,Setupavasthram district ,Sethupavasthram District ,Assistant Director ,Agriculture ,Shanti ,Dinakaran ,
× RELATED பேராவூரணி நீதிமன்றத்திற்கு கட்டிடம் கட்ட இடம்