×

பொங்கல் பாத்திரம் தருவதாக ஏமாற்றிய பாஜ நிர்வாகிகள்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குரும்பாலூரில் பாஜ சார்பில் நேற்று முன்தினம் பொங்கல் விழா நடந்தது. இதற்காக ஏராளமான பெண்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு புதிய சில்வர் பாத்திரம், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை தரப்படும் எனக்கூறப்பட்டது. ஆனால் பாதி பெண்களுக்கு மட்டுமே பொங்கல் சமைக்க சில்வர் பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டன. மீதி பேருக்கு பாத்திரம் வழங்கவில்லை. பச்சரிசி, வெல்லம், முந்திரி உள்ளிட்ட பொருட்கள் மட்டும் தனித்தனியாக வழங்கப்பட்டது. பாத்திரம் வழங்காததால் செங்கற்களால் தற்காலிக அடுப்பு வைத்து பொங்கல் சமைக்க காத்திருந்த பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அவர்கள், விழாவுக்கு ஏற்பாடு செய்த பாஜ ஒன்றிய நிர்வாகிகளான கார்த்திக், அன்பழகன் உள்ளிட்டோரிடம் ஆவேசத்துடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

The post பொங்கல் பாத்திரம் தருவதாக ஏமாற்றிய பாஜ நிர்வாகிகள் appeared first on Dinakaran.

Tags : BJP ,Perambalur ,Pongal ,Kurumbalur ,
× RELATED பெரம்பலூர் தொகுதியில் திமுக...