×

தாந்தோணி ஒன்றியத்தில் 900 குடும்பங்களுக்கு பழ மரக்கன்று தொகுப்பு

 

வேலாயுதம்பாளையம், ஜன.20: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தாந்தோணி ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு பழ மரக்கன்றுகளை எம்எல்ஏ சிவகாமசுந்தரி வழங்கினார். தாந்தோணி ஒன்றியம் மேலப்பாளையத்தில் தோட்டக்கலை உதவி இயக்குனர் கவிதா தலைமையில் பழ மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, 900 பயனாளிகளுக்கு பழ மரக்கன்று தொகுப்பு வழங்கினார். அப்போது அவர் கூறும்போது, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக தாந்தோணி வட்டாரத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மானிய விலையில் சிறுகுறு விவசாயிகளுக்கு 100% மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு (5ஏக்கருக்கு மேல்) 75% மானியத்தில் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பாசனம் வழங்குதல் குழித்தட்டு நாற்றுகள் (கத்திரி, தக்காளி, மிளகாய்) மற்றும் மானிய விலையில் பழமரக்கன்றுகள் வழங்குதல் பனை விதைகள் மூங்கில் செடிகள் வளர்ப்பு போன்ற திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதன்மையான திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-2024ம் ஆண்டில் மேலப்பாளையம் காளப்பட்டி புத்தாம்பூர் மூன்று கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் கட்டமாக 900 பழ மர செடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ் ஒன்றியத்தில் அனைத்து துறையின் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தோட்டக்கலை அலுவலர் மகேஸ்வரி, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் நவீன்ராஜ், யுவராஜ் கலந்து கொண்டனர்.

The post தாந்தோணி ஒன்றியத்தில் 900 குடும்பங்களுக்கு பழ மரக்கன்று தொகுப்பு appeared first on Dinakaran.

Tags : Dandoni Union ,Velayuthampalayam ,MLA ,Sivakamasundari ,Horticulture ,Upland Crops Department ,Kavitha ,Melapalayam ,Dandoni ,
× RELATED புகழிமலை பாலசுப்பிரமணிய கோயிலில் திரளான பக்தர்கள் கிரிவலம்