×

நீருக்கடியில் அணு ஆயுத தாக்குதல் டிரோன் சோதனை வடகொரியா அதிரடி

சியோல்: வடகொரியா நேற்று நீருக்கடியில் அணுஆயுத தாக்குதல் நடத்தும் டிரோனை சோதனை செய்து பார்த்ததாக அறிவித்துள்ளது. வடகொரியா எதிர்ப்பையும் மீறி தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் இணைந்து அவ்வப்போது கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதேபோல் கடந்த புதனன்று மூன்று நாடுகளும் இணைந்து 3 நாள் கடற்படை கூட்டுப்பயிற்சியை ஜிஜூதீவில் மேற்கொண்டன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா நீருக்கு அடியில் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட டிரோனை நேற்று சோதனை செய்தது.  எதிரிகளின் கப்பல்கள், துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தும் வகையில் இந்த டிரோன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.

The post நீருக்கடியில் அணு ஆயுத தாக்குதல் டிரோன் சோதனை வடகொரியா அதிரடி appeared first on Dinakaran.

Tags : North Korea ,Seoul ,South Korea ,United States ,Japan ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...