×

கேரள மாஜி அமைச்சர் தாமசுக்கு ஈடி சம்மன்

கொச்சி: கேரளாவில் கடந்த 2016ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்தவர் தாமஸ் ஐசக். மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த தாமஸ் கேரளா உட்கட்டமைப்பு நிறுவனத்தின் துணை தலைவராகவும் பதவி வகித்தார். அந்த சமயத்தில் அன்னிய செலாவணி சட்டத்தை மீறி உட்கட்டமைப்பு நிறுவனத்துக்கு நிதி திரட்டியதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள அமலாக்கத்துறை இந்த வழக்கில் ஜனவரி 12ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அன்று அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து வரும் 22ம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

The post கேரள மாஜி அமைச்சர் தாமசுக்கு ஈடி சம்மன் appeared first on Dinakaran.

Tags : ED ,Kerala ,minister ,Thomas. Kochi ,Thomas Isaac ,Finance Minister ,Marxist ,Thomas ,Vice Chairman ,Kerala Infrastructure Corporation ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள்...