×

“அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அரசு அதை எடுக்கும்” : பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணாநிதி விளக்கம்

சென்னை : பணிப்பெண் துன்புறுத்தல் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அரசு அதை எடுக்கும் என பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது இளம்பெண்ணை அவரது மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மர்லினா கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார் தொடர்பாக பல்லாவரம் எம்எல்ஏவின் மகன் ஆண்டோ, அவருடைய மனைவி மெர்லினா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நீலாங்கரை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி அளித்துள்ள விளக்கத்தில், எனது மகனுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக திருவான்மியூரில் தனியாக வசித்து வருகிறார். அவர்களின் வீட்டில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. இந்த சம்பவத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை அரசு எடுக்கும் என்று கூறியுள்ளார். வீட்டு வேலைக்கு சென்ற பெண்ணை தனது மகன் மற்றும் மருமகள் கொடுமைப்படுத்தியதாக எழுந்த புகாரையடுத்து பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

The post “அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அரசு அதை எடுக்கும்” : பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணாநிதி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Pallavaram MLA ,Karunanidhi ,Chennai ,Pallavaram ,
× RELATED இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன்...