×

எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்

சென்னை: பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகினார். தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இதனிடையே அவர் விசிகவில் இணையவுள்ளதாக பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில், திடீர் திருப்பமாக இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ‘செவ்வந்தி’ இல்லத்தில் காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காயத்ரி ரகுராம்; என் குடும்பத்தினர் எப்போதும் அதிமுகவினர் தான், நன்றியை மறக்க கூடாது என்பதற்காக அதிமுகவில் இணைந்துள்ளேன். என் தந்தை அதிமுகவில் பயணித்துள்ளார் என கூறினார்.

The post எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம் appeared first on Dinakaran.

Tags : Gayatri Raghuram ,Atamuang ,Edapadi Palanichami ,Chennai ,Gayathri Raghuram ,Atamugat ,Edappadi Palanisami ,BJP ,Annamalai ,Atamugam ,
× RELATED எப்படியெல்லாம் பொய் பேசுவாங்கனு 10...