×

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனக்கு எதிராக கே.சி.பழனிசாமியின் அவதூறு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் பின்னணியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி ஒரு அவதூறு வழக்கை தொடர்ந்திருந்தார்.

இந்த அவதூறு வழக்கை ஏற்கனவே தள்ளுபடி செய்து ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்திருந்தார். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு தாக்கல் செய்யும் போது தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என தெரிவித்து கே.சி, பழனிசாமி ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீடு மனு என்பது விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கட்சியில் இருந்து கே.சி, பழனிசாமியை நீக்கியதாகவும், அதன் பின்னர், கட்சி தொடர்பான செயல்பாடுகளை தடுக்கவே வழக்கு தொடர்ந்ததாகவும், அதில் தெரிவித்த கருத்துக்கள் அவதூறானவை இல்லை என்றும் வாதிட்டார். இதனை பதிவு செய்துகொண்ட உச்சநீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நடைபெறும் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன் இந்த வழக்கை நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

The post அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Aitmuga ,General ,Eadapadi Palanisami ,Delhi ,EBS ,Edappadi Palanisami ,C. Chennai High Court ,Palanisamy ,Attorney General ,Edapadi Palanisami ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக...