×

ஓசூர் சானமாவு வனப்பகுதிக்குள் மீண்டும் 15 யானைகள் தஞ்சம்: யானைகளை தேன்கனிக்கோட்டைக்கு விரட்ட நடவடிக்கை

ஓசூர்: ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்குள் மீண்டும் 15 யானைகள் கொண்ட யானைகள் கூட்டம் தஞ்சமடைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்திலிருந்து அக்டோபர் நவம்பர் மாதங்களில் 100க்கும் மேற்பட்ட யானைக்கூட்டங்கள் தமிழக எல்லைக்குள் இடம் பெயர்ந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வந்த யானை கூட்டங்களை வனத்துறையினர் ஜவளகிரி வழியாக பன்னார்கட்டா வனப்பகுதிக்கு மீண்டும் யானை கூட்டங்களை அனுப்பி வைத்தனர்.

தேன்கனிக்கோட்டை, சானமாவு வனப்பகுதிகளில் ஆங்காங்கே ஒரு சில யானைகள் தஞ்சமடைந்து விலை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் ஊடேதுர்கம் வனப்பகுதியிலிருந்து 13 காட்டுயானைகள் சானமாவு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. யானைகள் தாக்கக்கூடிய சூழல் உள்ளதால் யானைகளை விரட்ட வேண்டும் என வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சானமாவு, போடூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post ஓசூர் சானமாவு வனப்பகுதிக்குள் மீண்டும் 15 யானைகள் தஞ்சம்: யானைகளை தேன்கனிக்கோட்டைக்கு விரட்ட நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Hosur Sanamavu Forest ,Dhenkanikottai ,Hosur ,Sanamavu forest ,Karnataka ,Tamil Nadu ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு