திருப்பூர், ஜன. 19: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நாளை (20ம் தேதி) காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது. இந்த முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு மேற்கொள்ள இருக்கிறார்கள்.
அதன்படி அவினாசி பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாராபுரம் கெத்தல்ரேவ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் வீரசோழபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பல்லடம் சித்தம்பலம் மகளிர் திட்ட இ-சேவை மையத்திலும், திருப்பூர் வடக்கு வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும்,
திருப்பூர் தெற்கு கண்டியன்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், உடுமலை தளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், ஊத்துக்குளி காவுத்தம்பாளையம் கே.தொட்டிபாளையம் கூட்டுறவு கடன் சங்கத்திலும் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post திருப்பூர் மாவட்டத்தில் நாளை பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம் appeared first on Dinakaran.