×

தொழிலாளர் நல நிதி செலுத்த ஜன.31 கடைசி நாள்

 

கோவை, ஜன. 19: கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) பாலதண்டாயுதம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழிலாளர் நலநிதி சட்டத்தின்படி தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடைகள் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ரூ.20-ம், ஒவ்வொரு தொழிலாளிக்கும் வேலையளிப்பவர் பங்காக ரூ.40-ம் சேர்த்தாக மொத்தம் ரூ.60 வீதம் தொழிலாளர் நலநிதி பங்கு தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும்.

அதன்படி, 2023-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை வரும் 31-ம் தேதிக்குள் வாரியத்திற்கு செலுத்த வேண்டும். தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரத்திற்கு மிகாமல் ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கல்வி உதவித்தொகை, பாடநூல் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை, விபத்து மரண உதவித்தொகை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுபடா தொகைகள் ஏதாவது இருந்தால் அதனை ஒவ்வொரு காலாண்டிற்கும் கணக்கீடு செய்யப்பட்டு தொகையினை வாரியத்திற்கு செலுத்த வேண்டும். வருடத்தில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலநிதி செலுத்த வேலையளிப்பவர் கடமைபட்டவராவார். தொழிலாளர் நலநிதி செலுத்த தவறினால் தமிழ்நாடு தொழிலாளர் நலநிதி சட்டத்தின்படி வருவாய் வரி வசூல் சட்டத்தின்கீழ் அத்தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

The post தொழிலாளர் நல நிதி செலுத்த ஜன.31 கடைசி நாள் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Commissioner ,Balathandayutham ,Tamil Nadu Labor Welfare Board ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...