×

கந்தர்வகோட்டையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்ற முருக பக்தர்கள்

 

கந்தர்வகோட்டை,ஜன.19: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இருந்து ஏறத்தாழ 1000 முருக பக்தர்கள் கார்த்திகை, மார்கழி மாதங்களில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருக்கும் முருகப்பெருமானை காண மாலை அணிவித்து விரதம் இருந்து தை மாதம் நாலாம் நாள் பாதயாத்திரை சென்றனர். மதி குருசாமி, மற்றும் கோவித்தன் குருசாமி தலைமையில் மாலை அணிந்த முருகபக்தர்கள் காலை மாலை வேளைகளில் குளிந்து முருகன் ஆலயந்தில் பாஜனை செய்து அனைவருக்கும் பிரசாசம் வழங்கி வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக தை 4ம் நாள் நகரில் உள்ள ஐயப்பன் ஆலயம், மாரியம்மன் ஆலயம், வெள்ளை முனியன் ஆலயம் சென்று வழிபாடு செய்து பழனி முருகனை காண பாதயாத்திரை குழுவினர் புறப்பட்டனர். அனைவரும் குடும்பத்துடன் வந்து வழி அனுப்பிவைத்தனர். இந்த குழுவினர் ஏறத்தாழ 50 ஆண்டுகளாக செல்லுவதாக கூறுகிறார்கள் ஆண்டுக்கு ஒரு முறை பாதயாத்திரையாக சென்று முருகனை தரிசனம் செய்து வருவது உள்ளத்திற்கும், உடலுக்கும் புத்துணர்வு ஏற்படுகிறது என முருக பக்தர்கள் தெரிவித்தனர்.

The post கந்தர்வகோட்டையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்ற முருக பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Muruga ,Gandharvakot ,Palani ,Kandarvakottai ,Kandarvakota ,Pudukottai district ,Thai ,Lord ,Dindigul district ,Karthikai ,Margazhi ,Dinakaran ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...