×

காரைக்காலில் 100 நாள் வேலை திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது

 

காரைக்கால்,ஜன.19: காரைக்காலில் 100 நாள் வேலை திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சாய். ஜே.சரவணன் குமார் தெரிவித்துள்ளார். காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் அடுத்த விழிதியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா என்ற விழிப்புணர்வு யாத்திரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய். ஜே.சரவணன் குமார் கலந்து கொண்டு தலைமை வகித்தார். இந்நிகழ்வில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், கடன் உதவிகள் ஆகியவற்றை வழங்கி அமைச்சர் சாய். ஜே.சரவணன் குமார் பேசியதாவது:

பாரதப் பிரதமரின் திட்டம் 130 கோடி மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதுதான் முக்கியமான குறிக்கோளாகும். பாமர மக்களும் இத்திட்டத்தால் பயன்பெற வேண்டும். மேலும் புதுச்சேரி, காரைக்காலில் 100 நாள் வேலை திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இலவச அரிசிக்கு பதிலாக அவரவர் வங்கி கணக்குகளில் அதற்கான பணம் மாதாமாதம் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்டப்பட்டு தரப்பட்டுள்ளது. சுத்தமான சுகாதாரமான குடிநீர் மற்றும் மேம்படுத்தப்பட்ட சாலைகள் போன்ற திட்டங்களால் இன்று புதுவை காரைக்காலில் வளர்ச்சி அடைந்துள்ளது. இத்திட்டத்தால் பயன் பெறாத பயனாளிகள் பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post காரைக்காலில் 100 நாள் வேலை திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Minister ,Sai ,J. Saravanan Kumar ,Vixit ,Bharat ,Sankalp Yatra ,Vilithiyur Government Higher Secondary School ,Karaikal District ,Tirupatinam ,
× RELATED காரைக்கால் அம்மையார்-பரமதத்தர்...