×

செல்போனில் பேசியபடி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்

 

க.பரமத்தி. ஜன.19: செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். க.பரமத்தி ஒன்றிய பகுதிகளான தண்ணீர்பந்தல் பரமத்தி, தென்னிலை, வைரமடை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனப் போக்குவரத்து அதிகரித்துவருகிறது.

கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகளில் அவசரகதியில் செல்லும் லாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வண்டியை நிறுத்த மனமின்றி செல் போனை ஒரு காதில் வைத்துக் கொண்டு பேசியபடியே சென்று வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்துகள் ஏற்படுகிறது. இதை தடுக்க செல்போனில் பேசியபடி வாகன ஓட்டுபவர்களை எச்சரித்து அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

The post செல்போனில் பேசியபடி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : K. Paramathi ,Anwaribandal Paramathi ,Thennilai ,Vairamatai ,Karur-Coimbatore ,Dinakaran ,
× RELATED பொது இடங்களில் புகை பிடிப்போர் மீது நடவடிக்கை தேவை