×

எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர் ஊசூர் அடுத்த கோவிந்தரெட்டிபாளையம் கிராமத்தில்

அணைக்கட்டு, ஜன.19: ஊசூர் அடுத்த கோவிந்தரெட்டிபாளையம் கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில் இலக்கை நோக்கி களைகள் சீறிப்பாய்ந்தது. இதனை ஆயிரக்கணக்கோனார் கண்டு களித்தனர். அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த பூதூர், கோவிந்தரெட்டிபாளையம் கிராமத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு எருது விடும் விழா அரசு அனுமதியின்றி நேற்று நடந்தது. விழாவில் கோவிந்தரெட்டிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. தெருவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் ஆரவாரத்துடன் விரட்டினர்.

மேலும் வீடுகளின் மேல் நின்று கொண்டு பார்வையிட்டு கொண்டிருந்த பெண்கள் இளைஞர்களை தூக்கி வீசியடி சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளைக் கண்டு ஆரவாரம் செய்தனர். ஒவ்வொரு காளைகளும் மூன்று சுற்றுகள் அதற்கு மேல் வரை விடப்பட்டது. தொடர்ந்து விழா பகல் ஒரு மணி அளவில் முடிக்கப்பட்டது. விழா முடிக்கப்பட்டது என மைக்கில் அறிவித்துக் கொண்டே இருந்த போதும் சில மாடுகள் வாடி வாசலை தாண்டி எகிறி குதித்து உள்ளே ஓடிவந்தது. அப்போது கலைந்து வீடுகளுக்கு சென்று கொண்டிருந்த பலர் அச்சத்துடன் வீடுகளுக்கு சென்றனர். இந்த கிராமத்தில் நடைபெறும் மாடு விடும் விழாவில் பாய்ச்சல் மாடுகள் மட்டுமே பங்கேற்கும் என்பதால் விழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டு உற்சாகத்துடன் மாடுகளை விரட்டினர்.

விழாவில் மாடுகள் முட்டியதில் காயமடைந்த 6 பேருக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் கவிதாசிவக்குமார், கிராம விஏஓ தங்கமுத்து மற்றும் வருவாய் துறையினர் விழாவை கண்காணித்தனர். இந்நிலையில் மாடு முட்டி காயம் பட்டால் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு கூட போதுமான மருத்துவ குழுவினர் இல்லாமல் பாதுகாப்பின்றி விழாக்கள் நடைபெறுவது. எனவே உயர்த்தப்பட்டிருக்கும் காப்பீட்டுத் தொகையை குறைத்து உரிய அனுமதி வழங்கி விழாக்கள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென தாலுகாவுக்குட்பட்ட கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

The post எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர் ஊசூர் அடுத்த கோவிந்தரெட்டிபாளையம் கிராமத்தில் appeared first on Dinakaran.

Tags : Govindaredtipalayam ,Usur ,Dam ,Govindaredtipalayam village ,Dam taluka Usur ,Bhudur, ,Govindareddipalayam village ,Pongal festival ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27...