×

உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்து கொலை

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் திருவக்குளம் சிவன் கோயில் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு மகன் அருண்பாண்டியன்(28). இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 8 மாத பெண் குழந்தை உள்ளது. காணும் பொங்கலையொட்டி, நேற்று முன்தினம் இரவு அருண்பாண்டியன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த துரை மகன் செந்தில்(43) மற்றும் சிலர் அங்குள்ள திடல் வெளியில் குழுவாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அருண்பாண்டியனை கத்தியால் வெட்ட முயன்றுள்ளார்.

இதனை செந்தில் தடுக்க முயன்றபோது, அவரது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த மர்ம நபர் அருண்பாண்டினை கழுத்தில் வெட்டி, தலை துண்டித்து படுகொலை செய்துவிட்டு தப்பினார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அருண்பாண்டியனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அருண்பாண்டியன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்து கொலை appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Vadivelu ,Arunpandiyan ,Tiruvakulam Shiva temple ,Annamalai Nagar, Cuddalore district ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...