×

பிறந்த தேதிக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: இ.பி.எப் அறிவிப்பு

புதுடெல்லி: ஊழியர் வருங்கால வைப்பு நிதி கணக்கில்(பிஎப்) பிறந்த தேதிக்கான சான்றாக ஆதார் ஏற்கப்பட்டு வந்தது. பிறந்த தேதியை உறுதி செய்வதற்கு சமர்ப்பிக்கப்படும் ஆவண பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும்படி வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வருங்கால வைப்பு நிதி அமைப்பு மண்டல அலுவலகங்கள்,பிராந்திய அலுவலகங்களுக்கு ஜனவரி 16 ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஏற்று கொள்ளக்கூடிய ஆவணங்கள் பட்டியலில் இருந்து ஆதார் நீக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ், அங்கீகரிக்கப்பட்ட அரசு வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியல், பான் (நிரந்தர கணக்கு எண்) அட்டை போன்ற பல்வேறு ஆவணங்கள் பிறந்த தேதிக்கான சரியான சான்றாகப் பயன்படுத்தப்படுகின்றன.

The post பிறந்த தேதிக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: இ.பி.எப் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Unique Identification Authority of India ,Aadhaar ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு