×

சில்லி பாய்ன்ட்…

* போபண்ணா வெற்றி, சுமித் போராடி தோல்வி
ஆஸி ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டன்(ஆஸி) இணை 2-1 என்ற செட்களில் ஆஸி இணையை வீழத்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது. அதே நேரத்தில் இந்தியாவின் அனிரூத் சந்திரசேகர், விஜய்சுந்தர் பிரசாந்த் இணை முதல் சுற்றுடன் வெளியேறியது. மற்றொரு இந்திய வீரர் என்.ராம் பாலாஜி, ருமேனியா வீரர் விக்டர் விலாத் கார்னியா இணை விளையாட இருந்த இரட்டையர் ஆட்டம் மழை காரணாக இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் வென்று, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார் இந்தியாவின் சுமித் நாகல்(137வது ரேங்க்). அவர் நேற்று 2வது சுற்றில் 6-2, 3-6, 5-7, 4-6 என்ற புள்ளிக் கணக்கில் சீன வீரர் ஜே சாங்கிடம்(140வது ரேங்க்) போராடி தோற்றார். இந்த ஆட்டம் சுமார் 3 மணி நேரம் நடந்தது.

* வெற்றி வாய்ப்பில் ஆஸி
ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் நேற்று முன்தினம் அடிலெய்டு நகரில் தொடங்கியது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 188ரன்னில் சுருண்டது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 2வது நாளான நேற்றும் முதல் இன்னிங்சை தொடர்ந்தது. டிராவிஸ் விளாசிய 119ரன் உதவியுடன் ஆஸி 283 ரன் சேர்த்தது. அதனையடுத்து 95ரன் பின்தங்கிய நிலையில் விளையாடிய வெ.இ 2வது நாள் ஆட்ட நேரடி முடிவில் 2வது இன்னிங்சில் 6விக்கெட்களை இழந்து 73ரன் மட்டுமே எடுத்தது. வெ.இ வசம் 4விக்கெட்கள் மட்டுமே இருக்கிறது. அதுவும் 22ரன் பின்தங்கிய நிலையில் உள்ள வெ.இ அதிக ஸ்கோரை இலக்க நிர்ணயிக்க வாய்ப்பில்லை. அதனால் ஆஸி வெற்றியை, அதையும் இன்றே பெறும் வாய்ப்பு உள்ளது.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : Bopanna ,Sumit ,Aussie Open Grand Slam ,Rogan Bopanna ,Matthew Epton ,Dinakaran ,
× RELATED ஆஸி ஓபன் டென்னிஸ் இந்திய வீரர் சுமித் தகுதி