×

வெல்லுமா தெலுங்கு டைடன்ஸ்: ஐதராபாத்தில் புரோ கபடி

ஐதராபாத்: புரோ கபடி போட்டியில் ஐதராபாத் களத்துக்கான ஆட்டம் இன்று தொடங்குகிறது. இங்கு மொத்தம் 11 ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் உள்ளூர் அணியான தெலுங்கு டைடன்ஸ் அதிகபட்சமாக 4ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் தெலுங்கு டைடன்ஸ் உள்ளூர் ஆட்டங்களில் வெல்வதின் மூலம் பட்டியலில் முன்னேற்றம் காணும் வாய்ப்பு உள்ளது. அந்த அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 11 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கூடவே ஒவ்வொரு அணியும் 22 லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டிய நிலையில் எல்லா அணிகளும் குறைந்தபட்சம் தலா 12 முதல் 14 ஆட்டங்களில் விளையாடி உள்ளன. அவற்றில் அதிக வெற்றிகளை குவித்து நடப்பு சாம்பியன் ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ் முதல் இடத்தில் உள்ளது.

ஜெயபூர் களத்தில் நடந்த ஆட்டம் வரையிலான புள்ளிப்பட்டியல்
வரிசை அணிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி டிரா ஸ்கோர் வித்தியாசம் புள்ளிகள்
1 ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ் 14 10 2 2 +54 58
2 புனேரி பல்தன் 12 10 2 0 +156 52
3 தபாங் டெல்லி 13 7 4 2 +26 44
4 குஜராத் ஜெயன்ட்ஸ் 13 8 5 0 +8 44
5 அரியானா ஸ்டீலர்ஸ் 13 7 5 1 -26 39
6 பெங்கால் வாரியர்ஸ் 13 6 5 2 +5 38
7 யு மும்பா 12 6 5 1 +12 36
8 பாட்னா பைரேட்ஸ் 13 5 7 1 0 32
9 பெங்களூர் புல்ஸ் 13 5 8 0 -46 32
10 தமிழ் தலைவாஸ் 13 4 9 0 -14 25
11 யுபி யோதாஸ் 13 3 9 1 -34 22
12 தெலுங்கு டைடன்ஸ் 12 1 11 0 -141 10

The post வெல்லுமா தெலுங்கு டைடன்ஸ்: ஐதராபாத்தில் புரோ கபடி appeared first on Dinakaran.

Tags : Velluma Telugu Titans ,Pro Kabaddi ,Hyderabad ,Telugu Titans ,Velluma ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி அபார வெற்றி!.