×

அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தர வேண்டும்: கோடநாட்டில் வி.கே.சசிகலா கண்ணீர் மல்கப் பேட்டி

ஊட்டி: அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன் என கோடநாட்டில் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் கோடநாடு சென்றனர். 2017-ல் இந்த எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகு சசிகலா இங்கு வராமல் இருந்தார். 7 ஆண்டுகளுக்கு பிறகு, கொடநாடு பங்களாவுக்கு சசிகலா இன்று சென்றடைந்தார். அவருடன் இளவரசியும் சென்றிருக்கிறார். பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வி.கே.சசிகலா; கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுத் தருவார் என நம்புகிறேன் கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்குப் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். விரைவில் அவரது சிலை திறக்கப்படும். அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன். அந்த முயற்சி விரைவில் வெற்றி பெறும்; அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

The post அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தர வேண்டும்: கோடநாட்டில் வி.கே.சசிகலா கண்ணீர் மல்கப் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Godanath ,K. Sasikala ,Tears Malqab ,Adimuga ,Godanad ,Jayalalitha ,Sasikala ,2016 legislative elections ,
× RELATED ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்கிற...